பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

157 நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பனும் ஒருவன் ஆவன். ஆகவே, ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலாவில் கூறியுள்ள செஞ்சியர்கோன் காடவனும், ஆலங்குடிக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள செஞ்சி நான் கொற்றதும் ஒருவனேயா தல் வேண்டும். 8. வேணடர் வேந்து :- இவன் சேர மண்டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டியிருந்த ஒரு குறு நில மன்னன்; சேரர்மரபினன், முதற்குலோத்துங்க சோழன் காலத்திலேயே சேரவேந்தர் சோழமன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றாசர் ஆயினர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந் நிலையிலேயே இருந்தனர். அவர்களுள் கூத்தரால் உலாவிற் குறிக்கப்பெற்ற வேணாடர் வேந்தும் ஒருவனவன். இவனது இயற்பெயரும் பிறவும் இக்காலத்தில் புலப்படவிலலே, வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென்பகுதிக்குரிய பெயராகும். 9. அருந்த பாலன்:- இவன் முதற்குலோத்துங்கன் விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்த ஒரு தலைவன். இளங்காறிக் குடையான் என்ற குடிப்பெயரும், சிவலோக நாயகன் என்ற இயற்பெயரும், கங்கை கொண்ட சோழ அதந்தபாலன் என்ற பட்டப்பெயரும் உடையவன், இவன் கி. பி. 1122-ல் திருவிடைமருதூரில் பெருந் திருவாட்டி' என்னும் பெயருடைய மடம் ஒன்று அமைத் துத் தைப்பூச நாளில் சிவனடியார்க்கும் பிறர்க்கும் உண வாளிக்குமாறு மடப்புறமாக இறையிலி நிலம் விட்டனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால் புலப்படு கின்றது. (S. 1. 1. Vol. V. No. 702) இவனே, முதற்குலோத்