பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 ஆராய்வாம். அடிகள் தாம் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையில், 'கடல் சூழ்ந்த உல கெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற் சிங்க னடியார்க்குமடியேன்' என்று கூறியிருக்கின்றனர்; இவ்வடியில் வந்துள் எ ' காக்கின்ற' என்னும் நிகழ்காலப் பெயரெச்சம், காடவர்கோனாகிய கழற்சிங்கன் அடிகள் காலத்து மன்னன் என்பதை இனிது உணர்த்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக் குரிய பெயர்களுள் ஒன்றாகும். ஆகவே, இக்கழற்சிங்கன் பல்லவ அரசனாயிருத்தல் வேண்டும். அன்றியும் இவ்வேந்தன் அனுபத்து மூன்று அடியார்களுன் வைத் துச் சுந்தரமூர்த்திகளால் போற்றப்பட்டிருத்தலின் சிறந்த சிவயத்தருகவும் இருத்தல் வேண்டும். இனி, நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் கழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனுமில்லை. ஆதல் தரசிங்கவர்மன் இராசசிங்கவர்மன் என்ற பல்லவ வேந்தர்கள் இருந்துள்ளனர். அவர்களும் முதல் நரசிங்கவர்மன் திருஞானசம்பந்தர் காலத்தினருதலின் சுந்தரமூர்த்திகள் அவ்வரசன் காலத்தினரல்லர் என்பது திண்ண ம். ஆகவே, அடிகள் இராசசிங்கன் காவத் தினராதல் வேண்டும். இவ்வேந்தனை இரண்டாம் தர சிங்கவர்மன் என்றும் முதல் இராசசிங்கவர்மன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவர், இவனே காஞ்சி யிலுள்ள கைலாய நாதர் கோயில் எடுப்பித்தவன். இஃது அக்காலத்தில் இராசசிம்ம பல்லவேச்சுரம் என் னும் பெயருடையதாயிருந்தது. இக்கோயிலில் இவனது கல்வெட்டொன்று வடமொழியில் வரையப்பட்டுளது, அது இல்வேந்தனைச் சிவசூடாமணி' என்று புகழ்கின் றது. (South Indian Inscriptions Volume I No. 24).