பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

181 திண்ணம். இத்துணைச் சிறந்த சிவபத்தியுடைய பல்வவவேந்தன் வேறு ஒருவனும் இலனாதலின், சுந்தர மூர்த்திகள் திருத்தொண்டத் தொகையிற் கூறியுள்ள கோடவர்கோன் கழற்சிங்கன்' இவனேயா தல் வேண் டும். இனி, அடிகள் இவான இராசசிங்கன் என்றாதல் நரசிங்கன் என்றுதல் வழங்காமல் கழற்சிங்கன் என வழங்கியுள்ளாரேயெனின், சிங்கள் என்பது அவ்விரு பெயர்கட்கும் பொதுவாயிருத்தலின் அரசர்க்குரிய பெரு மையையும் வீரத்தையும் உணர்த்தும் கழல் என்னும் மொழியை அதற்கு முன் பெய்து கழற்சிங்கன் என்று சிறப்பித்துக் கூறிப் பாராட்டியுள்ளா சென்று உணர்க. இனி, அடிகள் காலத்துப் பேரரசன் நரசிங்கவர் மனே என்பது வேறொரு சிறந்த சான்று கொண்டும் உறுதியெய்துகின்றது. அடிகளை இளமையில் வளர்த்தவன் திருநாவலூரில் வாழ்ந்த நரசிங்க முனையரையன் என்ற சிற்றரசன் என்பது பெரிய புராணத்தால் அறி யப்படுகின்றது. முற்காலத்தில் பேரரசர்கள் தமக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களுக்கும் அமைச்சர்களுக் கும் படைத்தலைவர் களுக்கும் பட்டங்கள் வழங்குங்கால் தம் பெயர்களோடு இணைக்கப்பெற்ற பட்டங்களையே கொடுப்பது பெரு வழக்காயுள்ளது. இவ்வுண்மை கல் வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இனிது புலப்படும். உதாரணமாக, இராசராச மூவேந்தவேளான், உத்தம சோழப்பல்லவராயன், முடிகொண்ட சோழமூவேந்த வேளான், சயங்கொண்ட சோழ விழுப்பரையன் என் னும் பட்டங்கள் நெடுமுடிவேந்தர்களுடைய பெயர்க ளோடு இணைக்கப்பட்டிருத்தல் காண்க, முனேயரை யன் என்ற பட்டத்திற்கு முன் போரசனது நரசிங்கன்