பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 என்னும் பெயர் இணைக்கப்பட்டு நாசிங்க முனையரை யன் என்று சுந்தரமூர்த்திகளது வளர்ப்புத் தந்தை யாகிய குறுநில மன்னன், வழங்கப்பட்டுள்ளான் ஆகவே, சுந்தரமூர்த்திகளை வளர்த்த நரசிங்க முனை யரையன் என்பான் பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனுக்குத் திறைசெலுத்திய ஒரு சிற்றாசனா தலின் இவ்வடிகள் இப்பல்லவ அரசன் காலத்தின் ரென்பது உறுதியாதல் உணர்க. இனி, இவ்வேந்தன் பேரரசனென்பது, 'கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் -கழற்சிங்க னடியார்க்கு மடியேன்' என்னும் அடிகளது திருவாக்கி னால் நன்கு துணியப்படும். இதற்கேற்பச் சேக்கிழா ரும் இவனைக் 'கோக்கழற்சிங்கர்' என்று கூறுகின்றார். 'கோ' என்னும் ஓரெழுத்தொருமொழி பேரரசனையே உணர்த்துமென்பது 'கோக்கண்டு மன்னர் குரைகடற் புக்கிலர்' என்ற அடியாலும், 'கோ இராசகேசரிவர்மன்', 'கோப்படி சேகரிவர்மன்' 'கோச்சடையவர்மன்', 'கோமாற வர்மன்' என்னும் கல்வெட்டுத் தொடர் மொழிகளாலும் பெறப்படுகின்றது. ஆகவே, நம் இரண்டாம் நரசிங்க வர்மன் பேரரசனதல் காண்க. உமாபதி சிவாசாரியார் இதனை நோக்காது இவ்வேந்தனைக்குறு நில மன்னர் கரூட் சேர்த்திருப்பது பொருந்தா தென்க. இனி, இரண்டாம் நரசிங்கவர்மனது ஆட்சிக்காலம் கி. பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாதலின் சுந்தரமூர்த்திகளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். எனவே, நம் சுந்தரமூர்த்திகள் கி. பி. ஏழாம் நூற்கண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின்