பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 "கம்பநாடுடைய வள்ளல்' என்றும் அரசகேசரியார் தம் இரகுவமிசத்தின் பாயிரத்தில் 'கம்பநாடன்' என்றும் கூறியிருப்பன வெல்லாம் பிற்காலத் தெழுந்த வழக்கே யாம். கம்ப நாடு என்ற பெயருடன் முற்காலத்தில் ஒரு நாடு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்களி காதல் செப்பேடுகளிலா தல் சிறிதும் ஆதாரமின்மை அறியத்தக்கது. எனவே இப்பாடல் பழைமைவாய்ந் ததும் அன்று; உண்மைச் செய்தியைக் கூறுவதும் அன்று . கம்பாது இராமாயணத்தில் சீவகசிந்தாமணியில் ருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்களும், சூளாமணி விருத்தமுறைகளும் ஓசைநயங்களும் அமைந்திருப் பதைக் காணலாம். ஆகவே, இவ்விரு காட்பியங்களுக்கும் பிற்பட்ட காலத்தவர் கம்பர் என்பது தேற்றம். இவ்விரு நூல்களும் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலா தல், பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியி லா தல், இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது அறி ரூர்களது முடியாகும். எண்ணிய சகாத்தம் எண் னூற்றேழு' என்னும் பாடலை ஏற்றுக்கொண்டால், கம்பர் சிந்தாமணிக்கும் சூளாமணிக்கும் முற்பட்ட காலத்தவர் ஆவர். இஃது உண்மைக்கு முரண்பட்ட முடிவு என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, இப் பாடலின் துணைகொண்டு கம்பர் காலத்தைக் காண முய லுவது எவ்வாற்குதும் ஏற்புடைத் தன்று. இனி, இராமாயணத்திற் காணப்படும் அகச்சான்று கனின் துணை கொண்டு இவர் காலத்தை ஆராய்ந்து துணிவது பொருத்தமுடையதேயாம். மருத்துமலைப்பட லத்திற் காணப்படும்,