பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யிற் சில ஐயங்கள் தோன்றுவதால் இதனை மீண்டும் ஆராய்வது இன்றியமையாததாகும். நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்கள் பதினோ ராந்திருமுறையிற் காணப்படுகின்றன. அவற்றுள், திருத் தொண்டர் திருவந்தாதி என்பதும் ஒன்றாகும். அது, சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பாடுவதற்கு ஆதாரமாகக்கொண்ட நூல்களுள் ஒன்று. அவ்வுண்மையை,

  • அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை தந்த நாதனாம் நம்பியாண்டார் நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால்

வந்த வாறு வழாமல் இயம்புவாம்' 1 என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் நன்கறியலாம். எனவே, திருத்தொண்டர் வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறும் வழி நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பியினால் இயற்றப்பெற்றது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அந்நூல், தொகையடியார் ஒன்பதின் மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எழுபத்திரண்டு சிவனடியார் வரலாற்றையும் எண்பத்தொன்பது இனிய பாடல்களிற் கூறுகின்றது. தனியடியார்களை அறுபத்து மூவர் என்று கணக்கிட்டு முதலில் உணர்த்தியவர் நம்பி பாண்டார் நம்பியேயாவர். இப்பெரியார், தமது திருத்தொண்டர் திருவந்தாதி யில், புகழ்ச்சோழர், இடங்கழியார், கோச்செங்கட் சோழர் ஆகிய அடியார்களைப்பற்றிய பாடல்களில் தம் காலத்துச் சோழமன்னன் ஒருவனைக் குறிப்பிட்டுள்ளனர். நம்மை 1 பெரியபுராணம், திருமலைச்சிறப்பு, பா. 39.