பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அன்புடன் ஆதரித்துப் போற்றிவந்த அரசர், வள்ளல் முத லானோரின் பெயர்கள் என்றும் நின்று நிலவுமாறு அவர் களைத் தம் நூல்களிற் புகழ்ந்து பாடிவைப்பது தம் தமிழ் நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் வழக்கம் என்பது தொன்னூலாராய்ச்சியுடையார் யாவரும் அறிந்ததொன்றும். அத்தகைய செயல் புலவர்களின் நன் றிமறவாமையாகிய அருங்குணத்தை உணர்த்தும் எனலாம். பாரத வெண்பாவின் ஆசிரியர் பல்லவ அரசனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மளேயும், கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பர் வெண்ணெய்நல்லூர்ச் சடையவள்ளலையும், சேக்கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்கசோழனையும், புக ழேந்திப்புலவர் முரணை நகர்ச் சந்திரன் சுவர்க்கியையும், வில்லிபுத்தூராழ்வார் கொங்கர் கோமாளுகிய வரபதியாட் கொண்டானையும், அருணகிரிநாதர் விசய நகரவேந்தனான இரண்டாம் தேவராயனையும், துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் அண்ணாமலை ரெட்டியாரையும் நன்றிபாராட்டு முறையிற் புகழ்ந்து பாடியிருத்தலை அப்புலவர் பெருமான்கள் இயற்றியுள்ள நூல்களிற் காணலாம். சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்துவந்த ஆதித்தன் என்ற சோழமன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந் தாதியில் மூன்றுபாடல்களிற் பாராட்டியுள்ள செய்தியை அந்துலே ஒருமுறை படிப்போரும் உணர்ந்து கொள்ள லாம், அப்பாடல்கள், 'புலமள்ளிய மன்ளைச் சிங்கள நாடு பொடிபடுத்த தலமன்னிய புகழ்க் கோகன தாதன் குலமுதலோள் தலமள்னிய புகழ்ச் சோழன் தென்பர் தகுசுடர் வாள் வலமன்னிய எறிபத்தனுக் கீந்ததொர் வண்புகழே' [திரு. அ. 50]