பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுக கொங்கித் கனக மணித்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமாதென் செல்வமெனப்பறைபோக் கெங்கட் கிறைவள் இருக்குவே ளூர்மள் இடங்கழியே'

- [ஷ. 66) 'செம்பொன் அணிந்துசிற் றம்பலத்தைச் சிவ லோக மெய்தி நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுதல் என்பர் தல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப தறுந்தொங்கற் கோச்செங்க நளெனும் நித்தளையே' [ஷ. 82) என்பனவாம். இவற்றில் அச்சோழன் கொங்கு நாட்டி லிருத்து பொன்கொணர்ந்து தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச்சோழர் கோச்செங்கட்சோழர் ஆகிய அடி யார்களைத் தன் முன்னோர்களாகக் கொண்டவன் என்றும் இவ்லா சிரியர் கூறியது உணரற்பாலதாகும். ஆகவே இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன் யாவன்? என்பது ஆராயற்பால தாம். சோழமன்னருள் ஆதித்தன் என்னும் பெயருடை யார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலயசோழன் புதல்வனாகிய முதல் ஆதித்தசோழன் என்பான். மற்றையோன் சுந்தரசோழன் மூத்தமகனும் முதல் இராசராசசோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்தசோழன் ஆவன், அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர். அவன் தன் தந்தையினாட்சியில் இளவரசனாக விருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப்போனாள்