பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டப்படுவதன்று, இன தொன்னூல்கள் இவரைப்பற்றிக் கூறும் வரலாறுகளை ஆராய்ந்து காண்பாம். 1. அகத்தியனாரும் தமிழ்நாடும். சிவபெருமான் மலைமகனை மணந்த காலத்தில் எல்லோரும் இமயத்தில் கூடியிருந்தனராக, அப் பொறை யாற்றாமல் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்து விடவே, இறைவன் அகத்தியனாரைத் தெற்கின்கண் சென்று பொதியின் மலயில் இருக்குமாறு கூறியருளினர், இவரும் அங்ஙனமே போய்ப் பொ நியிலில் இருத்தலும் புவியும் சம நிலை எய்தியதாம். இது கந்த புராணத்திற் கண்ட வரலாருகும். இனி, அகத்தியனார் தென்றிசைக்கு வந்த வரலாற்றைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளனர். அது 'தேவ ரெல்லாருங்கூடி யாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது ; இதற்கு அகத்தியனாரே ஆண் டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போ துகின்றவர் கங்கை யாருழைச்சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதங்கியாருழைச்சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும்