பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

45) செய்தி 'முன்னர் விளக்கப்பட்டுள்ளது. தென்பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தைச் சிவலிங்கமாக்கி இவர் வழிபட்டனர் என்பது பண்டைதான் முதல் வழங்கிவரும் ஒரு வரலாறு ஆகும். இச்செயலால் இவரது சிவபக்தியின் மாண்பு எத்தகையது என்பது இனிது புலப்படுதல்காண்க. வேதாரண்யம் என்று வழங்கும் திருமறைக்காட்டிற்கு அண்மையில் அகத்தியான் பள்ளி என்னும் சிவஸ்தலம் ஒன்றுளது. அது, சைவசமய குரவரா கிய திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடைய தாகும். திருமறைக்காட்டில் சிவபெருமானது திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்த அகத்தியனார் தங்கியிருந்த இடமா தல்பற்றி அத்திருப்பதி அகத்தியான் பள்ளி என்ற பெயர் பெற்றது என்று பெரியோர்கள் கூறுகின் றனர். அங்கு அகத்தியர் திருவுருவமும் இருத்தல் அறியத் தக்கது. பொதியின் மலையிலும் சிவபெருமானது திரு மணக்கோலத்தை ஒருமுறை இவர் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்பப் பொதியின் மழயிலும் அகத்தியாச்சிரமம் என்ற பெயருடன் ஒரு கோயிலும் உாது. தமிழ் நாட்டில் பல சிவன் கோயில்களில் அகத்தியர் வந்து வழிபட்ட வரலாறுகள் ஆங்காங்குக் கூறப்படுகின்றன. அவ்விடங் களில் அகத்தியர் திருவுருவங்களும் வைக்கப்பட்டிருக் கின்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் காத்திமா நகரில் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிம்மவர்மரும் எடுப்பிக்கப்பெற்ற கைலாய நாதர் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள அகத்தியர் கோயிலே தமிழ் நாட்டு அகத்தியர் கோயில்களுள் பழமை வாய்ந்ததாகும். ஆகவே, இவரது திருவுருவம் சிவாலயங் களில் எழுந்தருனிவித்து வழிபாடு செய்யப்பட்டிருத்தல்