பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 | முன்னர் விலக்கப்பெற்றது. ஆகவே, அகத்தியனார் முத்தமிழிலும் புலமையுடையவர் என்பது வெளிப்படை எனவே. இம்முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணம் என்பது நன்கு துணியப்படும். 8. அகத்தியனாரும் கீழ்நாடுகளும். இந்தியாவிற்குக் கிழக்கேயுள்ள காம்போசம் (சும் போடியா )இந்து சீனம், ஜாவா என்ற நாடுகளில் அகத்தி யரைப்பற்றிய செய்திகள் கிடைத்தலால் அந்நாடு களுக்கும் இம்முனிவர்க்கும் நெருங்கிய தொடர்பு இருந் திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. கி. பி. 732-ஆம் ஆண்டில் சஞ்சயன் என்ற வேத்தன் ஒருவன் ஜாவிலுள்ள ஒரு குன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று உலகிற்கு நலமுண்டாகுமாறு கட்டிதான் என்று அந்நாட்டிற் காணப்படும் ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது. ஜாவாவில் ஏற்பட்ட சிவவழிபாடு குஞ்சர குஞ்ச நாட்டிலிருந்து வந்தது என்று அக் கல்வெட்டு அறிவிக் கின்றது. குஞ்சர குஞ்சநாடு என்பது பாண்டிதாடு என்றும் அந்நாட்டிலிருந்த அகத்திய முனிவரே ஜாவாவில் சிவ வழிபாட்டையுண்டுபண்ணியவர் என்றும் பிறகு அந்நாட் டரசர்கள், சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கினர் என்றும் ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் கூறுகின் றனர், கி. பி. 760-ல் ஜாவாவில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஓர் அரசன் அகத்தியருக்குக் கோயில் ஒன்று கட்டி அதில் இம்மூனிவருடைய கருங்கற்படிமத்தை எழுந்தருளு வித்தான் என்று உணர்த்துவதோடு அங்கு இவரது மரப்படிமம் ஒன்று முன்னர் இருந்ததென்றும் கூறு கின்றது. ஆகவே ஜவாவில் சிவன் கோயில்களும்