பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மையால், 'நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்தேவு செய்வானும்' என்பன முதலாக அத்திருப்பாட்டில் சொல் லப்பெற்றவை எல்லாம் திருவாரூர்ப் பெருமானது முடிவி லாற்றலுடைமையை உணர்த்துவனவேயன்றி நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துரைப்பன அல்ல என்பது தேற்றம். எனவே, இத்தொடர்கள் அடிகபோக் குறிக்கவில்லை என்பது தெள்ளிது. திருவிசய மங்கைப் பதிகத்தில் 'மங்கல வாசகர்' என்ற தொடர் மாணிக்கவாசகரைக் குறிக்கும் எனல் பொருந்தாது. மங்கலவாசகர் 'குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவர்' என்பது திருநாவுக்கரசரது திருவாக்கினால் அறியப்படுகிறது. அடிகள் அவற்றைக் கொண்டவர் என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் 'மங்கல வாசகர்' மாணிக்கவாசகர் என்று கொள்வது எங்ஙனம் ஏற்புடைத்தாகும்? மாணிக்கவாசகர் என்ற பெயர் வழக்கே கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலில் காணப்படுகின்றது. அதற்கு முன்னர் அடிகள் திருவாதவாடிகன், திருவாதவூர்ச் சிவ பாத்தியன், திருவா தவூராளியார், பெருந்துறைப்பிள்ளை என்றே வழங்கப் பெற்றுள்ளனர். ஆதலால், மங்கல வாசகர் என்ற தொடர் அடிகளை உணர்த்தாது என்பது திண்ணம். திருப்பூவணப்பதிகத்தில் வையைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந்தோன்றும்' - எனத் திருதாவுக்கரசர் கூறியிருப்பது திருப்பூவணத்தில் வையையாற்தங் கரை வில் திருக்கோயில் கொண்டு சிவபெருமான் எழுந்தருளி விருப்பதை உணர்த்துவதே யாகும். மதுரையில் வையை யாற்றங் கரையில் சோமசுந்தரக் கடவுள் பிட்டுக்கு மண்