பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சுமந்த வரலாற்றை அது உணர்த்துவதாயிருந்தால் அச் செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் என்பது ஒரு தலை. ஆதலால் அடிகள் வரலாற்றோடு அதனை இணைத் துப் பொருள் காண்பது சிறிதும் பொருத்துவதன்று. திருநாவுக்கரசரது தனித் திருத்தாண்டகத்திலுள்ள குட முழநந்தீசனை வாசகனாக் கொண்டார்' என்ற தொடருக்கு தந்தியெம் பெருமான் மாணிக்கவாசகராக அவதரித்தனர் என்று பொருள் கொள்வது எல்லாற்றானும் ஏற்றுக் கொள் னத்தக்கதன்று. இதிலுள்ள வாசகன் என்ற சொல் மாணிக்க வாசகர் என எங்கனம் பொருள் படும்? மாணிக்க வாசகர் என்ற பெயர் வழக்கே பிற்காலத்தது என்பது முன்னர் க்காட்டப் பட்டுள்ளது. மாணிக்கவாசகர் வரலாறு கூறும் தமிழ் நூல்கள் எல்லாம் நந்திகேச்சுரர் அடிகரைக அவதரித்தனர் என்று கூறவில்லை. ஆனால் கண நாதர் ஒருவர் அங்கனம் அவதரித்தனர் என்று கூறுகின்றன, எனவே, நந்திதேவர் மாணிக்கவாசகராகத் தோன்ற வில்லை என்பது தெளிவு. ஆகவே, திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களில் மாணிக்கவாசகரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. சுந்தரமூர்த்திகள் தம் திருத்தொண்டத் தொகையில் 'பொய்யடிமையில்லாப் புலவர்' என மாணிக்கவாசகரைக் குறித்துள்ளனர் என்பது அன்னோர் எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும். பொய்யடிமையில்லாப் புலவரை மாணிக்க வாசகர் என்று கொண்டால் தனியடியார் அறுபத்து மூவரையும் அறுபத்து நால்வர் எனவும் தொகையடியார் ஒன்பதின்மரையும் எண்மர் எனவும் கொள்ளவேண்டிய தியை ஏற்படும். அவ்வாறு கொள்வது சிவாநுபூதிச் செல்வர்களும் புலவர் பெருமான்களுமான நம்பியாண்டார்