பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீவல்லபன் என்பான் தன் ஆட்சியின் இறுதியில் கி. பி. 862ல்-அரிசிற்போரில் தோல்வியெய்திச் சோழ நாட்டை யிழந்து விட்டான். அவனுக்குப் பிறகு அவ்வாண்டில் முடிசூடிய இரண்டாம் வரகுணன் தன் தந்தை இழந்த சோழநாட்டை மீண்டும் பெறும் பொருட்டுப் படையுடன் சென்று கி. பி. 880-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரு விடை மருதூருக்கு வடக்கே மண்ணி நாட்டிலுள்ளதும் தன் பாட்டன் முதல் வரகுணனது அரண்மனேயிருந்தது மாகிய இடவை நகரையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றினான். அவன் சோழநாட்டில் ஒரு பருதியைக் கைப்பற்றியதை யறிந்த பல்லவ அரசனாகிய அபராஜித வர்மனும் சோழ மன்னனாகிய முதல் ஆதித்தனும் கங்க நாட்டு வேந்தனகிய முதல் பிருதுவிபதியின் துணை கொண்டு வரகுண வர்மளை எதிர்த்துப் போர் புரிந்தனர், இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்துமைலில் மண்ணியாற்றங்கரையிலுள்ள திருப்புறம் பயத்தில் கி. பி 880ல் நிகழ்ந்த பெரும்போரில் வரகுண வர்மன் தோல்வி யுற்றுச் சோழ நாட்டில் தான் கைப்பற்றிய பகுதியை இழந்து தன் நாட்டிற்குத் திரும்புமாறு நேர்ந்தது. இந் நிகழ்ச்சியால் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் சோழ நாடு பாண்டியராட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை என்பது தெள்ளிது. ஆகவே மாணிக்கவாசகர் அப்பாண் டியன் காலத்தவர் அல்லர் என்பது தேற்றம். அவ்வேந்தன் கி. பி. 792 முதல் கி. பி. 835 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்; சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாட்டின் தென்பகுதி ஆகியவற்றைக் கைப் பற்றித் தன் ஆட்சிக்குட் படுத்திய பேரரசன். அவன் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரையிலுள்ள,