பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசூரில் தங்கியிருந்த போது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக 290 பொற்காசு வழங்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப்படுகின்றது. ஆகவே, அவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரது பேரரசு மிக்க உயர் நிலையில் இருந்தது என்பது திண்ணம். எனவே; அவனைத்தான் மாணிக்க வாசகர் தம் திருச்சிற்றம்பலக் கோவையாரில் பாராட்டியிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பியும் முறையே திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலும் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தத்திலும் அவனது சிவ பத்தியின் பெருமையினை விளக்கியிருத்தல் காணலாம், இனி, மாணிக்கவாசகர் தம் போற்றித் திருவகவலில் மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து' என்று கூறியிருப்பது அடிகள் சங்கராச்சாரியார் காலத் தில் இருந்தவர் என்பதை உணர்த்துதல் காணலாம். வேதாந்த தத்திரத்திற்குச் சங்கரபாடியம் என்ற பேருரை வரைந்து அச்சமயத்தை யாண்டும் பரப்பிய ஆதி சங்கரர் கி.பி. 788 முதல் 820 வரையில் இருந்தவர் என்பது அறிஞர் களது கருத்தாகும். எனவே, ஆதி சங்கரரும் அடிகளும் ஒரே காலப் பகுதியில் இருந்தவர்கள் என்பது வலியுறுதல் அறியத் தக்கது. இதுகாறும் விளக்கிய வாற்றால் முதல் வரகுணா பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி. பி. எட்டாம் நூற்றாண் டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதி பிலும் மாணிக்க வாசகர் - இருந்திருத்தல் வேண்டும். என்பது புலப்படுதல் காண்க. -