பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரின் புதல்வர் என்பதும், துறவறநெறியில் நின்ற அந்தணரென்பதும், இளம்பூரணர் என்ற இயற்பெயரு டையவர் என்பதும், மணக்குடி புரியான் என்ற தொல் குடியில் தோன்றியவர் என்பதும் சொல்லப்பட்டிருக் கின்றன. மணக்குடியுடையான் என்னுங் குடிப்பெயரே மணக்குடி புரியான் என்று பாயிரத்திற் கூறப்பட்டிருக் கின்ற து. இனி, நாகன்குடி புடையான், அண்டக்குடியுடையான், கடுவங்குடியுடையான், இளையான்குடியுடையான், என் னும் குடிப்பெயர்கள் முறையே நாகன் குடையான், ! அண்டக்குடையான்,. கடுவங்குடையான், 3 இளையான் குடையான் என்று முற்காலத்தில் வழங்கிலந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, மணக் குடியுடையான் என்பதும் மணக்குடையான் என்று அக் காலத்தில் வழங்கியிருத்தல் வேண்டும். ஆகவே, இனம் பூரண அடிகள், மணக்குடையார் என்ற தன் குடிப்பெய ராலும் தொடக்கத்தில் வழங்கப்பெற்றிருத்தல் கூடும். 5 அங்ஙனம் வழங்கிய நாளில் இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை, மணக்குடையாருரை என்று பெயர் எய்தியிருப் 1. South Indian Inscriptions, Vol III. No, 73. 2.S. I. I., Vol Ill. No. 73. 3.5.1.1., Vol III, No. 2. 4. Ibid, No. 57. 5. பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய புலவர் பெருமான் அருண்மொழித் தேவர், இயற்பெயரால் வழங்கப்பெருமல் சேக்கிழார் என்னும் குடிப்பெயரால் வழங்கப்பெற்று வருகின்றனர் என்பதும் அறியத்தக்கதாகும்.