பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 வேந்தன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். அவன் தொண்டை மண்டலத்தில் அவர்கள் படைவீட்டு இராச்சி பத்தில் கி. பி. 1321 முதல் 1339 முடிய அரசாண்ட வென்று மண்கொண்ட சம்புவராயனுடைய புதல்வன் ; இராசநாராயணமல்லிநாதசம்புவராயன் என்ற பெயருடன் கி. பி. 1336 முதல் 1373 வரையில் அங்கு ஆட்சிபுரிந் தவன்1 ; வீரசம்பன் என்ற சிறப்புப் பெயருடையவன். அவ்வர் சனைத் தம் உலாவில் புகழ்ந்துள்ள இரட்டையாரும் அவன் ஆட்சிக்காலமாகிய கி. பி. பதினான்காம் நூற் நாண்டின் இடைப்பகுதியில் நம் தமிழகத்தில் வாழ்த்தவர் ஆவர். ஆகவே கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்து வருகின்றன என்பது நன்கு தெரியப்படும். இனி, கி. பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற் நண்டுகளில் அரசாண்ட சோழமன்னர்களின் கல்வெட்டுக் களில் தேவாரம் என் றசொல் காணப்படுகின்றது. அக் காலத்தில் அச்சொல் எப்பொருளில் வழங்கப்பெற்றுள்ளது என்பது ஆராய்தற்குரியதாகும். முதல் இராசேந்திச் சோழன் ஆட்சியில் தஞ்சைப் பெரிய கோயிலில் வரையப்பெற்றுள்ள பெரிய பெருமா ளுக்குத் தேவார தேவராக எழுந்தருரூவித்த தேவர் பாதாதிகேசாந்தம் ஐவிரலே இரண்டுதோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தமும் உடையவராகக் கனமாகப் பித்தளையால் எழுந்தருளுவித்த சந்திரசேகரதேவர் திருமேனி ஒன்றும்' என்ற கல்வெட்டுப்பகுதியில் தேவாரம் 1. Ins. 86 of 1921. Ins. 424 of 1095. Iris. 390 of 1905. 2. South Indian Inscriptions' Vol. II. No. 38