பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்னுஞ் சொல் வந்துள்ளது. முதல் இராசராசசோழன் அரசியல திகாரிகளுள் ஒருவனும் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆகிய ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்த வேளான் என்பான், அப்பெருங் கோயிலில் அதனை எடுப் பித்த இராசராசசோழன் படிமத்தையும் அவனுடைய வழிபடுகடவுள் சந்திரசேகரர் திருமேனியையும் கி. பி. 1015-ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்த செய்தியை அக் கல்வெட்டு உணர்த்துகின்றது. அதில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்திருத்தல் அறியத்தக்கது. அஷ்வேந்தனது மற்றொரு கல்வெட்டிலும் தேவாரம் என்ற சொல் காணப்படுகிறது. அஃது உடையார் ஸ்ரீராசேந்திரசோழதேவர் கங்கைகொண்டசோழபுரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரரியில் தானஞ் செய்தருளாயிருந்து உடையார்ஸ்ரீ இராஜராஜாசுவர முடையார் கோயிலில் ஆசார்யபோகம் நம் உடையார் சர்வசிவபண்டி நசைவா சாரியர்க்கு' 1 என்ற கல்வெட்டுப் பகுதியில் இருத்தல் காண்க, இக்கல்வெட்டில் குறிக்கப் பெற்ற கோயில் என்பது அரண்மனையாகும். தேவா ரம் என்பது அரசன் தான் தோனும் தன் வழிபடு கடவுளப் பூசித்தற்கு அரண்மனையில் அமைத்திருந்த வழிபாட்டறையாகும். ஆகவே, இக்கல்வெட்டில் வந்துள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு நிகழ்ந்துவந்த இடத்தைக் குறித்தல் உணரத்தக்கதாம் அம் முதல் இராசேந்திரசோழனது கட்சிக்காலத்தில் 1. Ibid No. 20.