பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சி. பி. 1017 ஆம் ஆண்டில் நாங்கூருடையான் பதஞ்சலி பிடாரன் என்பவன் தேவார தாயகம் செய்பவகுயிருந்தான் என்று கும்பகோணம் தாலூகா மானம்பாடியிலுள்ள கல் வெட்டொன்று! கூறுகின்றது. அக் கல்வெட்டில் தேவார நாயகம் என்ற தொடரைக்கண்ட ஆராய்ச்சியாளர் எல்லோரும், கோயில்களில் தேவாரம் பாடுவோரைக் கண்காணித்தற்பொருட்டு முதல் இராசேந்திரசோழன் அமர்த்தியிருந்த ஓர் அதிகாரியே தேவாரநாயகம் ஆவன் என்று உறுதிசெய்துவிட்டனர். 2 சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமயகுரவர் மூவர் பதிகங்களும் கோயில் களில் வழிபாடு நடைபெற்றபோது இசையுடன் பாடப் பெற்றுவந்தன என்பது ஆங்காங்குக் காணப்படும் பல கல்வெட்டுக்களால் நன்கறியப்படுகிறது. ஆனால், தேவார நாயகம் என்ற அதிகாரி ஒருவன் கோயில்தோறும் சென்று அந்நிகழ்ச்சிகளைக் கண்காணித்த செய்தியாதல் அவன் அங்ஙனம் கண்காணித்தஞான்று கண்ட குறை பாடுகளை நீக்கியமையா தல் அவன் செய்த பிற சீர் திருத்தங்களா தல் அவ்வேந்தர்களின் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. கோயில்களில் நாள் வழிபாடு, திங்கள் விழா, ஆண்டுவிழா முதலானவற்றை நடத்துவ தற்கு ஸ்ரீகாரியஞ்செய்வான் என்ற அதிகாரி ஒருவன் அந்நாளில் அரசனால் அமர்த்தப்பெற்றிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. 3. அவனே அவ்வக் கோயிலில் திருப்பதிகம் பாடுவோரை மேற்பார்க்கும் கடமையுடையவன் ஆவன். எனவே, அதன் பொருட்டுத் 1. Ins. 97 of 1932. 2. The Colas, Vol, II. PP, 476 and 477. 3. South Indian Inscriptions. Vol ll. Nos, 40 and 60.