பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூறுகின் றன. அன்றியும், 'தேவாரத்துக்குத் திருப்பதியம்' என்ற தொடரே தேவாரம் வேறு திருப்பதியம் வேறு என்பதை நன்கு வலியுறுத்துதல் அறியத்தக்கது. கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இக் கல் வெட்டுக்களில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் அமைந்துள்ளமை காண்க. இனி முதற்குலோத்துங்க சோழன் கி. பி. 1110-ஆம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலத்தில் திரு ஆறலிறைவனை வழிபட்ட பிறகு அவ்வூர் மண்டபம் ஒன்றில் பகலில் தங்கியிருந்த செய்தி காஞ்சிமா நகரிலுள்ள கல் வெட்டொன்றில் காணப்படுகிறது. அதில் வேந்தன் 'திருவூறலிறைவனை வழிபட்ட திகழ்ச்சியை உணர்த்தும் பகுதி 'திருவூறல்பெருமானைத் தேவாரஞ்செய்து' என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஆகவே சோழமன்னர் களின் ஆட்சிக்காலத்தில் தேலாரம் என்ற சொல் வழிபாடு (பூசை) என்னும் பொருளில் வழங்கிவந்தது என்பது தன்கு துணியப்படும். கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டொன்றில் தேவாரம் என் னுஞ்சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்துளது. செய்யுள் வடிவத்திலுள்ள அக்கல்வெட்டு, 2 'பொன்னி நாடனு முரிமையு மமைச்சகு மிருப்பதும் சிறைக்கோட்டம் - பொறுப்பிரெண்டள வளர்த்ததோள் வலியினாற் 1. Annual report on South Indian Epigraphy for 1921, part II, para 33. 2. Epigraphia Indica, Vol. XXIII, No 27.