பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

79 கன்னி காவிரி பகிரதி நின்பரி யாடுதண்துறைவாவி காவல் மள்ளவர் திறையுடன் வணங்குவது உன் பெருந்திருவாசல் வென்னி பாதபோர்க் கன்ளடர் வென்னிடப் பொருத்தும் பெருஞ்சேனை விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்து தீ விரும்பிய தேவாரம் பிள்னி காவல் அவனிநா ராயண பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவ கோப்பெருஞ் சிங்கனின் பெருமையார் புகழ்வாரே' என்பதாம். இதுகாறும் விளக்கியவாற்றால் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் கல்வெட்டுக்களில் வந்துள்ள தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில வழங்கப்பெற்றுள்ளமை தெள்ளிதிற் புலனாகும். கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த கொற்றங்குடி உமாபதிசிவாசாரியர் தம் கோயிற் புராணத்தில் 'தப்பற்றுயர் தவ மூவாயிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணி முற்றப்புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்' என்று கூறி யிருத்தலால் அவர் காலத்திலும் தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில் வழங்கியுள்ள மை உணரற் பாலது. ஆகவே கல்வெட்டுக்கானால் அறியப்பெற்ற 'இப்பொருள் நூல் வழக்காலும் உறுதியெய்து தல் காண்க. எனவே இறைவழிபாட்டில் (தேவாரத்தில்) ஓதப்பெற்று வந்தமைபற்றி மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்