பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சிலகோயில்களின் பெயர்க்காரணம் பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுங்கால் சிவபெரு மான், முருகவேள், கண்ண ன், பலதேவன் ஆகிய கடவு ளர்க்குத் தமிழகத்திலுள்ள பல ஊர்களிலும் கடைச்சங்க நாளில் ஆலயங்கள் இருந்தன என்பது இனிது புலனாம். இந்தாற் பெருந் தெய்வங்கணயும் 'ஞாலங்காக்குங் கால முன்பிற் றேயா நல்லிசை நால்வர்' என்று ஆசிரியர் நக்கீரனார் புகழ்ந்து கூறியுள்ளனர், காவிரிப்பூம்பட்டினம், மதுரை ஆகிய தலை நகரங்களிலிருந்த கோயில்களைக் கூறத்தொடங்கிய ஆசிரியர் இளங்கோவடிகள் முறையே பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்' எனவும் நுதல் விழி தாட்டத்திறையோன் கோயிலும்' எனவும் சிவபெரு மானது கோயிலேயே முதலில் குறித்திருப்பது அக்காலத் தில் வாழ்ந்த தமிழ் மக்களுள் பெரும்பகுதியினர் சைவ சமயத்தைக் கைக்கொண்டொழுகினர் என்பதைத் தெள்ளி திற் புலப்படுத்தும். அன்றியும், மணிமேகலையின் ஆசிரிய ராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காவிரிப்பூம் பட்டினத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த தெய்