பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

76 - நரசிங்கவர்மன் காலத்தில் நிலவியவர் சுந்தரமூர்த்திகள், எனவே சைவ சமயகுரவர் மூவரும் வாழ்ந்த காலம் பல்லவ மன்னர்கள் அரசாண்ட ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளே யாம். இப்பல்லவ வேந்தர்களே சில கற்றளிகளை எடுப் பித்தனர். பிறகோயில்களெல்லாம் செங்கற் கோயில் களாகவே இருந்தன. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால் கோயில்களின் அமைப்பும், சிற்ப நுட்பங்களும், அவற்றின் வளர்ச்சியும் பிற வரலாறுகளும் நன்கு விளங்கும். இனி, சமயகுரவர்கள் அருளிய தேவாரப்பதிகங்களில் சில திருப்பதிகளிலுள்ள கோயில்களுக்குப் பெயர்கள் குறிக் கப்பெற்றிருத்தல் அறியற்பாலது. அப்பெயர்கள் சில ஏதுக்கள் பெற்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென் பது திண்ணம். அவற்றுள் சிலவற்றை அடியிற் காண்க. திருப்பதிகளின் பெயர் அங்குள்ள கோயில்களின் பெயர் 1. காவிரிப்பூம்பட்டினம்.... பல்லவனீச்சுரம் - 2. பழையாறை பட்டீச்சுரம் 3. திருப்பனந்தாள் . தாட்கேச்சுரம் 4. திருநறையூர் சித்தீச்சுரம் 5. கொட்டையூர் கோடீச்சுரம் 6. உறையூர் மூக்கீச்சுரம் 7. நன்னிலம் பெருங்கோயில் 8. குடவாயில் பெருங்கோயில் 9. கீழ்வேளூர் பெருங்கோயில் 10. அம்பர் பெருங்கோயில் 11. நல்லூர் பெருங்கோயில் 12. தண்டலை நீணெறி ... பெருங்கோயில்