பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாறு எடுப்பிக்கப்பெற்ற கோயில்கள் நம் நாட்டில் பல உள்மன. அன்றியும், இறந்த வேந்தர்களை நினைவு கூர்தற்குக் கோயில்கள் எடுப்பித்தலும் உண்டு. அவை 'பள்ளிப் படை' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இங்கனம் எடுப்பிக்கப் பெற்ற கோயில் ஒன்று பட்டீச்சுரத் திற்கு அண்மையில் திருமலைராயன் - ஆற்றின் வடகரையில் உள்ளது. அதனை இப்போது இராமநாதன் கோயில் என்று வழங்குகின்றனர். அது பஞ்சவன் மாதேவீச்சுரம்' என்ற பெயருடையது என்பது அக்கோயிலிலுள்ள ஒரே கல்வெட்டால் புலப்படுகின்றது. பஞ்சவன் மாதேவி என்ற அரசி இறந்த பின்னர், பள்ளிப்படையாக அங்கு அது எடுப்பிக்கப்பெற்றது என்பது அக்கல்வெட்டால் அறியப்படும் மற்றொரு செய்தியாகும். (Ins. No. 271 of 1927) வட ஆர்க்காடு சில்வா மேற்பாடியிலுள்ள ஒரு கோயில் 'அரிஞ்சயேச்சுரம்' என்ற பெயருடன் உள்ளது. அதனை இக்காலத்தில் 'சோழேச்சுரம்' என்று வழங்கு கின்றனர். அது முதல் இராசராசசோழன் பாட்டனாகிய அரிஞ்சயன் இறந்த பிறகு அவனுக்குப் பள்ளிப்படையாக எடுப்பிக்கப்பெற்றது என்பதை அடியில் வரும் கல்வெட்டி கால் அறியலாம். (1) ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெரு நிலச்செல்வி யுத்த (2) னக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்த ளூர்ச்சா (3) கல கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்க பாடியும் நுளம்ப (4) பாடியுத் தடிகை பாடியுங் குடமலை நாடுங் கொல்லமூங்கலிங்கமும் (5) எண்டிசை புகழ்தர வீழமண்டலமுத் திண்டி (6) றல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வார வூழியெல்லா (7) யாண்டுந்