பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

"செகுவ ருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலை நீணெறி காண்மினே' எனவும் “கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச்செங்கணான் செய்கோயில் நாடிய தன்னிலத்துப் பெருங்கோயில் தயத்தவனை' எனவும் போதரும் சைவசமய குரவர்களது திருவாக்குகளினாலும் இச்செய்தி வலியுறுதல் காண்க. பெருங்கோயில்கனெல் லாம் செய்குன்றுகள் மேல் எடுப்பிக்கப்பெற்றவை. எனவே, இவற்றை மலைக்கோயில்கள் என்றும் கூறலாம். திரு ஞான சம்பந்தப் பெருமான் திருநல்லூரிலுள்ள பெருங் கோயிலை மலைமல்கு கோயில்' என்று கூறியிருப்பது அதன் அமைப்பை ஒருவாறு உணர்த்துவதாகும். அப் பாடிகள் காலத்தில் நம் தமிழ் நாட்டில் எழுபத்தெட்டுப் பெருங்கோயில்கள் இருந்தனவென்பது, பெருக்காது சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோவி லெழுபதினோ டெட்டுமற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிப்பட்டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில்சூழ்த்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே, என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றது. சமய குரவர்கட்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் வேந்தர்க எடுப்பித்த பெருங்கோயில்களும் நம் நாட்டில் பல உண்டு. 3. ஞாழற்கோயில்:- மேற்குறித்த பாடலில் வந் துள்ள கோயில்களுள் ஞாழற்கோயிலும் ஒன்றாகும். இக்