பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயில் எங்குளது என்பதைத் தேவாரப்பதிகங்களின் துணைகொண்டு அறிய இயலவில்லை. ஆயினும், சில கல் வெட்டுக்கள் இச்செய்தியை உணர்த்துகின்றன. அவற் றுள் ஒன்றை அடியிற் காண்க. (ஸ்வஸ் திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி வன் மாக்கியாண்டு பதினெட்டாவது வடகரைத் தேவதானம் பாதிரிப் புலியூர்த் திருக்கடை ஞாழற் பெருமானடிகளுக்கு (2) த்திருவுண்ணாழிகைக் கணப்பெருமக்கள் வழி தென் கரைத் தேவதானம் பெருமாக்களூர் ஆஸ்வலா பன சூத்த ரத்து......கோத்தரதத்து நாராயணஞ் (3) சேந்தனிடை யொருதிருவமிர் துக்கு வேண்டும் முதலிவனிடைக் கொண் டோம் இது சந்திரா தித்தவல் செலுத்துவோமானோந் திருவுண்ணாழிகைக் கணப் (4) பெருமக்களோம். (S. I. I. Vol. VII No. 744.) இக்கல்வெட்டினால் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கோயில் முற்காலத்தில் ஞாழற்கோயில் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது வெளியாகின்றது. அங்கு எழுத்தருளியுள்ள சிவபெருமானும் ஞாழற் பெருமான டிகள் என்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பது உணரற்பாலது, ஞாழல் என்பது ஒரு மரத்தின் பெயர் அம்மரத்தினடியில் எழுந்தருளியுள்ள பெருமான் ஞாழற் பெருமான் என்று வழங்கப்பெற்றனரா தல் வேண்டும். * திருவாழுங்கடை ஞாழற்சினை பமரும்' என்ற மற்றொரு கல்வெட்டுப் பகுதியினாலும் இச்செய்தி வலியுறும். எனவே, ஞாழல் மரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலை ஞாழற்கோயிவென்றும் வழங்கியிருப்பது சாலப்பொருத்து மென்க.