பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82) 4. கொகுடிக்கோயில்:- சமய குரவர்களால் குறிக் கப்பெற்ற மற்றொரு கோயில் கொகுடிக் கோயிலாகும். இது திருக்கருப்பறியலூரின் கண் உள்ள கோயில் என்பது தேவாரப்பதிகங்களால் அறியக்கிடக்கின்றது. இவ்வூர் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்கப்பெறுகின்றது. இதனை மேலைக்காழி என்றுங் கூறுவர். இது சீகாழிக்கு மேற்கே ஆறுமைல் தூரத்திலுள்ளது. கொகுடி என்பது ஒருவகை முல்லையாதலின் அம்முல்லை செறித்துள்ள ஓரிடத்தில் அமைந்த பெருங்கோயில் கொகுடிக்கோயில் என்று வழங்கப் பெற்றது. நேரிற் சென்று பார்த்தபோது இவ்வுண்மை புலப்பட்டது. 5. இளங்கோயில்:- தேவாரப்பதிகத்தில் குறிக்கப் பெற்ற வேறொரு கோயில் இளங்கோயில் ஆகும். இது திருமீயச்சூரின்கண் உள்ளது. பழைய கோயிலைப் புதுக் குங்கால் அதற்கு அண்மையில் இறைவனே எழுந்தருளு வித்து வழிபாடு புரிந்த கோயில் இளங்கோயில் ஆகும். சேய்மையிலுள்ளார் தாம் வழிபடும் கடவுளைத் தம்மூர்க் கணித்தாக எழுந்தருளுவித்து எடுப்பித்த கோயிலும் இளங்கோயில் என்று வழங்கப்பெறும். இனி, கோயில்களிலுள்ள திருச்சுற்று மாளிகைகளில் சில சிவலிங்கங்கள் இருத்தலை இன்றும் காணலாம். அவற்றை அகத்தியர், வசிட்டர், விசுவாமித்திரர் முதலான முனிபுங்கவர்கள் எழுந்தருளுவித்துப் பூசித்துச்சென்றனர் என்று கூறுவது இற்றைநாள் வழக்கு : தலபுராணங்களும் இங்ஙனமே கூறுகின் றன. உண்மைச் செய்தியோ இதற்கு மாறாக உளது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றை அடியிற் காணலாம்.