பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆலமர நீழலில் எழுந்தருளியுள் கோயில் ஆலக்கோயில் என்று வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது உய்த் துணரப்படுகின்றது. திருக்கச்சூர் செங்கற்பட்டிற்கு வடக்கேயுள்ள சிங்கப்பெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு நண்பகலில் சிவபெருமான் அன்னம் அளித்த தலம் இதுவேயாகும். 7. தூங்காண மாடம்:-- இது பெண்ணாகடந்தி ஒன்ள கோயிலின் பெயரென்பது 'துன்னர் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே' என்னும் அப்பாடிகள் திருவாக்கினால் அறியப்படுகின்றது. கடந்தை என்பது பெண்ணாகடத்தைக் குறிப்பதாகும். இவ்வூரிலுள்ள கோயிலின் கருப்பக்கிரகத்தின் மேலுள்ள விமானத்தின் அமைப்பு தூங்கும் பரானையைப் போன்றிருத்தலின் இக் கோயில் தூங்கானைமாடம் என்று வழங்கப்பெற்றது போலும். இதனை வடமொழியாளர் 'கஜபிரஷ்டவிமானம்' என்பர். இத்தகைய விமானமமைந்த கோயில்கள் கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள இன்னம்பரிலும் முருகப் பிரானது தலங்களுள் ஒன்றாகிய திருத்தணிகை யிலும் உள்ளன. தூங்கானை மாடத்தைப் பற்றிய பிறசெய்திகளும் கரக்கோயில், மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப்பெறும்.