பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் செய்திகளும் வெளியாகின் நன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு. இராகவையங்காரவர்கள், சாசனத் தமிழ்க்கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள், அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டிலா காவின் ஆண்டு அறிக்கைகளின் மூலம் அறியக்கிடக்கும் மூன்று தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகள், தமிழ் இலக்கிய வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதி, அவற்றை அடியிற் குதிக்கின்றேன். 1. திருப்பாலைப் பந்தல் உலா :- திருப்பாலைப்புத்தல் என்பது தென்னார்க்காடுஜில்லா திருக்கோவலூச்த் தாலூகா விலுள்ள ஓர் ஊர். அவ்பூரில் எழுந்தருளியுள்ள சிவ பெருமான்மீது எல்லப்ப நயினார் என்னும் புலவர் பெருமா ஞால் பாடப்பெற்றது இவ்வுலா என்பது அவ்வூர்க்