பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிற் கருப்ப இல்லின் தென்சுவரில் வரையப்பெற் றுள்ள ஒரு கல்வெட்டாற் புலப்படுகின்றது. (Inscription No. 401 of 1938), உலா இயற்றி அரங்கேற்றிய இவ் வாசிரியர்க்குக் கோயில் அதிகாரிகள் சில நிலங்களும் ஒரு மனேயும் அளித்ததோடு இறைவர்க்குப் படைக்கப் பெறுந் திருவமுதில் ஒரு பகுதியை நாள்தோறும் வழங்கி வருமாறு செய்திருந்தமையும் அக் கல்வெட்டால் அறியப் படுகின்றது. அன்றியும், அக் கல்வெட்டு இவ்வாசிரியர் உண்ணாமுயே நயினார் என்பவருடைய புதல்வர் என்றும் காலிங்கராயர் என்ற பட்டமுடையவர் என்றும் கூறு கின்றது. இவர் இயற்றிய வேறு நூல்கள், திருவாரூர்க் கோவை! அருணாசல புராணம், திருவருளையந்தாதி என்பன. அன்றியும், வீரைக் கவிராசபண்டிதர் இயற்றிய சௌந்தரியலகரிக்குச் சிறந்ததோர் உரையும் இவர் எழுதி யுள்ளனர். இவர் வடமொழியிலும் சிறந்த புலமையுடைய வராயிருந்தனர் என்பது அவ்வுரையால் புலனாகின்றது. இவர் திருவண்ணாமலைக்கு மேற்கேயுள்ள தாழையூரினர் என்பதும் சி. பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வர் என்பதும் கண்டு அறியத்தக்கன. 2. இறைசைப்புராணம் :- இறைசை என்பது இந் நாளில் எலவானாதர் என்னும் பெயருடன் தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர் த்தாதாகாவில் உனது. அது முற்காலத்தில் இறையானரையூர் என்னும் பெயருடைய தாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவ பெருமான் இயற்றியருளிய திருவிளையாடல்களைக் கூறும் 1 இக்கோவை, காலஞ்சென்ற மகாமகோபாத்தியாக டாக்டர் ஐயரவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.