பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

87 தலபுராணமே இறைசைப்புராணமாகும். இந்நூலின் ஆசிரியர் திருமலை நயினார் சந்திரசேகரர் என்னும் புலவர் ஆவர். எனவே இவர் சந்திரசேகரர் என்ற இயற்பெய குடையவர் என்பதும் திருமலை நயினாருடைய புதல்வர் என்பதும் அறியக்கிடத்தல் காண்க. இவ்வா சிரியர் மெய் கண்டசந்தானத்தைச் சேர்ந்த திருவண்ணாமலைச் சத்திய ஞான தரிசினிகளின் மாணவர். இவர் இறைசைப்புராணம் பாடி அரங்கேற்றிய போது, கோயில் அதிகாரிகள் இவ ருக்குச் சில நிலங்களும், ஆனந்ததாண்டவன் திருவீதியில் ஒரு மனையும் கி. பி. 1510ஆம் ஆண்டில் அளித்துள்ளனர். இச்செய்திகளெல்லாம் எலவானாசூர்க்கோயில் முதற் பிரகாரம் மேலைச்சுவரில் வரையப்பட்டுள்ள ஒரு கல்வெட்டி னால் நன்கு புலருகின்ற ன (lns. 485 of 1938). இந் நூலாசிரியர் பதினாறும் நூற்றாண்டில் வாழ்ந்த புலவ ராவர். 3. ஓங்குகோயிற்புராணம்:- இராமநாதபுரம் ஜில்லா விலுள்ள திருப்புத்தூரில் திருத்தளியாண்ட நாயனார் கோயிலில் எழுந்தருளியுள்ள ஓங்குகோயிலுறைவார் என் துஞ் சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களைக் கூறுவது இப்புராணமாகும். இது, திருவம்பலமுடையார் மறைஞானசம்பந்தர் என்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. இவ்வாசிரியர் திருப்புத்தூரிலிருந்த சிறுமடம் என்னும் பெயருடைய ஒரு மடத்தில் வதித்தவர்; மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர்; கி. பி. 1484ஆம் ஆண்டில் புராணம்பாடி அரங்கேற்றியவர். இவர் தம் நூலை அரங்கேற்றியபோது கோயில் திகாரிகள், மேல் திரு மங்கலம் என்ற மண்ணிமங்கலத்தில் இவருக்கும் ஐந்து மா நிலம் அளித்தனர் என்று தெரிகிறது. இச்செய்திகள். .