பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

91 மதுரை - ஆகிய இருபெரு நகரங்களிலும் சிவபெருமான், முருகவேள், திருமால, பலதேவர் என்னும் நாற்பெருங் கடவுளர்க்கும் கோயில்கள் இருந்தன என்பது பெறப் படுதல் காண்க. அன்றியும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரன் கோயிலும், அருகர் பள்ளியும், புத்தர் பள்ளியும் இருந்தமை மேலே குறித்துள்ள அடிகளது திருவாக்கினால் வெளியாகின்றது. ஆனால், பிள்ளையார் எனவும் விநாயகர் எனவும் கணபதி எனவும் வழங்கப்பெறும் யானைமுகக் கடவுனைப்பற்றிய குறிப்பு அதில் காணப்பெறாதிருத்தல் ஆராய்தற்குரியதாகும். இதனைக் கூர்ந்து நோக்கின், கடைச்சங்கநாளில் பிள்ளையார் வழிபாடு நம் தமிழகத்தில் இருந்திலது என்பது தெள்ளிதிற் புலனுகும். இனி, காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாலதி என்னும் பார்ப்பனப்பெண் ஒருத்தி தன் மாற்றாள் மகவை எடுத்துப் பரலருத்த, அப்பால் விக்கினமையின் அஃது உயிர் துறந்தது. அதனைக்கண்ட மாலதியும் நடுக்கமுற்றுத் தன்மீது சுமத்தப்பெறும் அடாப்பழிக்கு அஞ்சியவனாய், அம் மகவை எடுத்துக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தி லுள்ள எல்லாக் கோயில்களுக்கும் சென்று, அதற்கு உயிரளிக்குமாறு வரம் வேண்டினன், எத்தேவரும் அவ்வரம் கொடாமற் போகவே, இறுதியில் காவிரிப்பூம்பட்டினத்தி விருந்த மாசாத்தனர் அவள் பால் இரக்கங்கொண்டு தாமே அம்மகவாகத்தோன்றி அவனது இன்னலைப் போக்கி யருளினார். இது சிலப்பதிகாரத்திற் காணப்பெறும் ஒரு வரலானாகும். இராக் கூறவந்த அடிகள், அம்மாலதி என்பாள் இறந்த 'வைக் கைகளில் ஏந்தி வரம்வேண்டி நின்ற கோயில்க - எல்லாவற்றையும் குறித்துள்ளனர். அதனை,