பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 நம் நாட்டிலும் பரவியிருத்தல் வேண்டுமென்பது உய்த் துணரப்படும் செய்தியாகும். சோழமண்டலத்தில் தஞ்சை ஜில்லா நன்னிலந் தாலூகாவில் திருச்செங்காட்டங் குடியிலுள்ள கோயில் கணபதீச்சுரம் என்ற பெயருடன் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நிலவியது என்பது, "பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ டென்வாழும் அன்னங்காள் அன்றில் கான் அகன்றும் போய் வருவீர்காள் கன்னவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே' என்னும் திருஞான சம்பந்தப் பெருமான் திருவாக்கினால் அறியப்படுகின்றது. அக்கோயிலிலுள்ள விநாயகரது பெயர் வாதாபி விநாயகர் என்பதாம். தமிழ் நாட்டிலுள்ள விநாயக ரது படிமங்களுள் கணபதீச்சுரத்திலுள்ளதே மிகத் தொன்மை வாய்ந்தது எனலாம். முதன்முதலில் விநாயகர் எழுந்தருளுவிக்கப் பெற்ற கோயிலானமையின் திருச் செங்காட்டங்குடி ஆலயம் கணபதீச்சுரம் என்று வழங்கப் பெற்றது போலும். இனி, வாதாபிக்கும் திருச்செங்காட்டங்குடி விநாயக ருக்கும் ஒரு தொடர்பு இருத்தல் ஈண்டு உணரற்பால தாகும். வாதாபி என்பது மேலைச்சளுக்கியாது தலைநகரம் ; இக்காலத்தில் பம்பாய் மாகாணத்திலுள்ள பீஜப்பூர் ஜில்லாவில் உள்ளது. அங்கிருந்து அரசாண்ட மேலைச் சரூக்கிய மன்னனாகிய இரண்டாம் புலகேசிக்கும் காஞ்சிமா