பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

95) நகரிலிருந்த பல்லவவேந்தருகிய முதல் நரசிம்மவர்ம லுக்கும் கி. பி. 642-ல் ஒருபெரும்போர் நிகழ்ந்த து. முதல் நரசிம்ம வர்மனது படைக்குத் தலைமை வகித்துப் போர் நடத்தியவர், திருச்செங்காட்டங்குடியிற் பிறந்தவரும் பாஞ் சோதி என்ற இயற்பெயருடையாவரும் அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவரும் திருஞானசம்பத் தசுவாமிகளால் தேவரரப் பதிகத்தில் பாராட்டப் பெற்றவரும் ஆகிய சிறுத்தொண்ட நாயனாரே ஆவர். அப்பெரியார் புல கேசியைப் போயிற்பு றங்கண்டு அவனது தலைநகராகிய வாதாபியையும் அழித்து அங்குவெற்றித் தூண் நிறுஷி அதில் தம் வீரச்செயல்களையும் எழுதுவித்தனர். அக்கல் வெட்டின் ஒருபகுதி இன்றும் அந்நகரில் உளது. இச் செய்திகளுள் சிலவற்றை, 'மள்ளவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளைதெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்ளன வென் னிலகவர் ந்தே இகலரசன் முன் கொணர்ந்தார்.' என்னும் பெரிய புராணச் செய்யுளிலும் காணலாம். இவ்வாறு வெற்றிவீராகத் திரும்பிய சிறுத் தொண்டர், சேய்மையிலுள்ள வாதாபி நகரில் தாம் எய்திய வெற்றிக்கடையாளமாகத் தம்மால் அழிக்கப்பெற்ற அந் நகரிலிருந்து சில விநாயகர் படிமங்களைக் கொண்டுவந்து, அவற்றுள் ஒன்றைத் தம் ஊராகிய திருச்செங்காட்டங் குடியிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளுவித்து, அதற்கு