பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாதாபி விநாயகர் என்ற பெயரும் இட்டிருத்தல் வேண்டும். அன்றியும், அந் நாயனார் தாம்கொணர்ந்த விநாயகர் படிமங்களைத் தமதூருக்கு அண்மையிலுள்ள திருப்புகலூரிலும் திருவாரூரிலும் எழுந்தருளுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை அத்தலங்களிலுள்ள ஒவ்வொரு விநாயகர் வாதாபி விநாயகர் என்று வழங்கப் பெறுதலால் அறியலாம். திருவாரூரிலுள்ள வாதாபி விநாயகர் படிமம் கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்றது என்று மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறி யுள்ளனர். இதன, 'மேதவியருக்கிடமாய் மிளிர் திருவாரூர்த் தளியில் போதாவி தொறுமலர்ந்து பொலிகலிங்கம் நின்றும்போந்து ஓதாவி யனைத்துமினிது உவந்தேத்த வுவந்துதவும் வாதாவி மழகளிற்றை மலர்தூவி பிறைஞ்சுவாம்' என்ற தியாகராசலீலையிலுள்ள செய்யுளால் உணரலாம். ஆனால், கலிங்கத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற விநா யகர் வாதாவி விநாயகர் என்று கூறப்பெற்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. எனினும், இச்செய்தி அவ் விநாயகர் படிமம் வெளி நாட்டிலிருந்து ஒருகாலத்துக் கொண்டுவரப்பெற்றிருத்தல் வேண்டுமென்ற உண்மையை வலியுறுத்துதல் காண்க, இனி, புற நாடுகளின்மேல் படையெடுத்துச் சென்ற