பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத் தலைவர் களுள் ஒருவனான அரையன் தேவுந் திருவும் உடையான் பொத்தப்பிச்சோழன் என்பான், வீரபாண்டியனுக்கு உதவும் பொருட்டுப் பாண்டிமண்டலத்தின் மீது படை யெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்புங்கால், அந் நாட்டில் அழிந்த ஊர்களிலிருந்து தன் வெற்றிக்கு அறிகுறியாகக் கொண்டுவந்த கூத்தாடுந் தேவரையும் (நடராசப் பெருமான்) நாச்சியாரையும் சீகாழியிலுள்ள திருத்தோணியப்பர் ஆலயத்தில் எழுந்தருளுவித் தனன் என்பது அங்கேயுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. அக்கல்வெட்டு, 'ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தயுங் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு பதினொன் நாவது: சுத்தமலி வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து ரூண நாடரான உடையான் அரையன் தேவுந்திருவுமுடையானான பொத்தப்பிச் சோழன், வீரபாண்டியன் வினை செய்து பாண்டியன் மண்டலத்து அழிந்த ஊர்களில் நின்றும் ஜெய தம்பமாக எழுந்தருளுவித்துக் கொண்டு போந்த கூத்தாடும் தேவரையும் நாச்சியாரையும் ராஜாதி ராஜவான தாட்டு திருக்கழுமல் நாட்டு உடையார் திருத்தோணி புர முடையார் கோயிலில் திருநடை மாளிகையிலே எழுந் தருளி இருந்து பூசைகொண்டருளப் பண்ணுகவென்று இக்கூத்தாடுந் தேவர்க்கும் நாச்சியாருக்கும் வேண்டு நிபந்தங்களுக்கு இறுப்பதாக இட்ட எண்வேலி ஆக்கூரில் தேவதானம் திரண்டுவேலி இட்ட நிலம் இருவேலி இன் னிலம்.......... வேலியும் கைக்கொண்டு பூசைசெலுத்தப் பண்ணுக வென்றும் இப்படியே இன்னயனார் கோயிலிலே கல் வெட்டப் பண்ணுக வென்றும் பிரசாதஞ் செய்தருளின திருமுகம் வந்தமையால் இந்நிலம் இருவேலியும் கொண்டு