பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இலக்கிய இயல் இலக்கியம் என்ற சொல் எம்மொழிச் சொல்? அதன் வேர்ப் பொருள் யாது? வேர்ப் பொருளாலேயே ஒரு சொல் எம்மொழிக் குழந்தை என்பது விளங்கும். பொதுவாக 'லட்சியம்', 'லட்சணம்’ என்ற சமசுகிருத சொற்களே முறையே இலக்கியம்', 'இலக்கணம்' என்று மாறின என்பர். ஆனல், இதை இறுதி முடிவாக ஏற்பதற்கில்லே! முதற் காரணம் தமிழைப் போல சமசுகிருதத்தில் "இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் அப்பொருள் குறிக்கும் சொற்களாய் வழங்கவில்லை. பழந்தமிழ் நூல் கனில் இலக்கணம்” (பார்க்க: பழந்தமிழ்ச் சொல்லடைவு: புதுவை இந்தியக் கலைக்கழகம்; தொகுதி 1) இருக்கிறதே தவிர இலக்கியம் இல்லை! இலக்கியத்தைக் குறிக்கச் செய்யுள், நூல், பனுவல் முதலிய சொற்களே வழங்கப் பட்டுள்ளன! இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம் பலில் என்ற பத்தாம் நூற்ருண்டு நன்னூல் 141-ஆம் நூற். பாவிலேயே இலக்கியம் என்ற சொல் முதலில் வழங்கி யுள்ளதாகத் தெரிகிறது. இதல்ை வியாகரணம் சாகித் யம் என்ற சமசுகிருத சொற்களை வழங்காமல் பழந்தமிழர் "இலக்கணம்' என்றும் இடைக் காலத் தமிழர் இலக்கியம்’ என்றும் வழங்குவானேன்? அதிலும் இலக்கணம் என்ற சொல்லே வழங்கிய தொல்காப்பியரும், சங்க இலக்கியச் சான்ருேர்களும், திருவள்ளுவரும் இலக்கியம்' என்ற சொல்லே வழங்காதது ஏன்? இவ்வினுக்கள் இலக்கணம், இலக்கியம் என்ற சொற்கள் இலக்கு என்னும் தமிழ் வேருடையன என்னும் விடையையும் மறைமுகமாகத் தருகின்றனவன்ருே? இலக்கு என்ற சொல்லும் இலங்கு' என்பதன் வலித்தல் விகாரமோ? இவ்வாறு எண்ணத் தாண்டுவது பழந்தமிழ் நூல்களுள் இலங்கு என்னும் சொல் ஏராளமான இடங்களில் பயின்று வருவதாலேயே ஆகும். (பார்க்க: பழந்தமிழ்ச் சொல்லடைவு: தொகுதி 1)