பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர்-டாக்டர் மு. வரதராசனர் துணை வேந்தர், மதுரைப் பல்கலைக் கழகம் பல நூற்ருண்டுகளுக்கு முன்பே இந் நாட்டில் தொல்காப்பியனரும் மேலை நாட்டில் அரிஸ்டாட்டி லும் வளர்த்த ஒரு துறை இலக்கியத் திறளுங்:ை ஆகும். அது இக்காலத்தில் விரிவும் விளக்கமும் பெற்று நன்கு வளர்ந்து வருகிறது. இலக்கிய இயல்' என்னும் இந்நூல் இத்துறையில் வனம் ஊட்ட வந்துள்ளது மகிழத்தக்கது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் இத்துறையில் நிரம் பிய ஆர்வம் உள்ளவர். இந்துாவில் அவர் அறி வியலும் உணர்விலும் பற்றித் தந்துள்ள விளக் கங்கள் கற்றுக் களிக்கத் தக்கன. போலச் செய்தல் எவ்வாறு கலைகளின் தோற்றுவாய்க்கு உதவியது என்பதும் நன்கு எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. தமிழிலக்கணத்துள் பொருள் பெற்றுள்ள சிறப்பிட மும் நூலாக ரியரால் திறம்பட விளக்கப்பட்டுள்ளது. கலைஞர் தம்மை இழத்தும் பிறர்க்காக அரியன ப.ை த்து அளிப்பவர் என்ற உண்மையும் இன்ளுே ரன்ன பிறவும் தெளிவாக்கப்பட்டுள்ளன. பகுப்பும் தொகுப்புமாகப் பலவற்றை விளக்குகையில் வரை பட முறையைக் கையாண்டு ஆங்காங்குத் தெளி வுறுத்திச் செல்லுதல் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. இலக்கிய ஆய்வில் ஈடுபாடு கொண்டோர் அனைவரும் வரவேற்கத்தக்க நல்ல நூல் இது. மு. வரதராசன் மே, 1974