பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 படிப்படியாகப் படித்தல் f சிக்க ஒரு பொருளையும் கற்கும்போதும் படிப் :படியாகக் கற்றுப் படிப்படியாகக் கற்பித்தலே முறை. அப்போதே அவை பாடம் (இருபொருளிலும்) ஆகும்! இம்முறையை மேற்கொள்வார் தம் அறிவாற்றலுக்கு ஏற்றவாறு கற்றலேயும் கற்பித்தலையும் விரைவுபடுத்திக் கொள்ளலாம். அது வேறு. ஆனால், அதற்காகப் படிப் படியாக எறும்-இறங்கும் முறையை நெகிழ விட்டுக் குதித்தல் கன்றன்று. இது, இம்முறை பிறழ்வார் இடறி விழுந்து பெறும் ஏதங்களால் எளிதில் உணரத்தக்கது. மேலும், படிமுறையாக - முறைப்படியாக-கற்றலும் கற்பித்தலும் செரிப்பிற்கும் செறிப்பிற்கும் ஏற்றது செரிக்கச் செரிக்கவே செறிப்பு சாலும். -