பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்படியாகப் படித்தல் 25 உடல், உள்ளம், உயிர். இவற்றுள் உடல் வேறு உள்ளம் வேறு என்பதை ஓரளவு உணர்தல் எளிது; ஆனால், உள்ளம் வேறு, உயிர் வேறு என்று தெளிதல் பெருமளவு அரிது. உடலே உள்ளமும் உயிரும் என்பது இன்றைய பெரும்பாலான அறிவியலாளர் போக்கு. உள்ளத்தை ஒப்புக்கொள்வோரும் உயிரை ஒப்புக் கொள்வதில்லை. இவ்வுண்மையை விளக்கும் விளக்கப்படம் வருமாறு : மனிதன் 多 2 % ޝަޖަ. Ö 4 麥 2iயிர் 2டல் Z Z 公 உடல் வேறு, உள்ளம் வேறு, உயிர் வேறு என்று உணர்தல் அவரவர் அறிவுயர்வையும் உணர்வாழத்தையும் பொறுத்தது ஆகும். கனவிலே இயங்கும் உள்ளத்தையும் உடலின் கூறு என்றே அறிவியலாளர் கண்ணயர்ந்து அறைவர்: 'உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' எனும் உண்மையை அவர் செத்தாலே அறிவர்-உணர்வர் போலும்! ஈண்டு நாம் கருத-வற்புறுத்தத் தக்கது உடல், உள்ளம், உயிர் ஆகிய மூன்றும் ஒன்று; வேறு வேறு வேறு என்பதன்று. ஒன்றே ஆயினும் முக்கூற்றன என்பது முழு உண்மை. உடம்பில் கைகள், கால்கள், செவிகள், மூக்கு முதலியன அறுபட்டாலும் மனிதன் எண்ண இயலும்உயிருடன் இருக்க இயலும் என்பது தெளிவு. இப் போதைக்கு மாற்று இதயமும் பொருத்தலாம் என்பதும் தெளிவு. இன்னும் ஏட்டிலும் இயலாததாய் இருப்பது மாற்று மூளை அமைப்பதே ஆகும். காரணம் இதயத்தை ஒரளவேனும் இயற்றக் கற்றுவிட்ட அறி 2