பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் தமிழின் புதுமுகங்கள் 45 ஏனைய நான்கும் பிரிவின் அடிப்படையில் எழும் துன்பங் களோடு தொடர்புடையவை என்பதும் எண்ணத் தக்கது. ஆம்-வாழ்க்கையில் ஐந்தில் ஒரு பகுதிதான் இன்பம் போலும்! அந்த இன்பமும் துன்பத்திற்கு வித்து தான் போலும்! இந்த வாழ்வியல் உண்மை இலக்கிய இயலுக்கும் இலக்கண இயல் எழுத வந்த தொல்காப்பி யருக்கும் தெரியும் போலும் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட அந்தப் பழம் பசலிக்குத் தெரிந்த செய்தி இன்று மைக்குத் தெரியுமோ?! தெரியும்!-தெரியாமலா துன்பச் சுவையே இலக்கியச் சுவைக்குப் பெரிதும் துணை என்று கூறும் ஆங்கில இலக்கியத் திறய்ைவுகளே இரவுப் பாடம்-இரவல் பாடம்-படித்துக் கொண்டிருக்கிருேம்: இனி மேற்காட்டிய இரு வட்டக் கூறுகளுள் இருக்கும் மும்மூன்று வட்டங்கட்கும் இடையே இருக்கும் இணைகளேக் கணைகள் காட்டுவதும் காணத்தக்கதுகருதத்தக்கது. வாழ்க்கையில் முதலும் கருவும் உரியுமாய் இருப்பவை, கலையில் இயலும் இசையும் நாடகமுமாய் இருப்பது ஆழ்ந்து எண்ணிப் பயன்பெறத்தக்கது. 2 இவ்வாறு நெருங்கிய நேயம் கொண்டிருக்கும் இலக்கிய இயலையும்-வாழ்க்கை இயலையும் இரு விழி களாகக் கொண்டு ஐந்திலக்கணத் தமிழுள் நடுவணத் தமிழாய் விளங்கும் பொருள் தமிழின்-தமிழ்ப் பொருளின்-புதுமுகங்களைப் பார்ப்போம். அதற்குத் துணை புரியும் சிறுசிறு வரைப்படிக் கண்ணுங்கள். வருமாறு: ت: ۰ن: ,... ,: " : ... را