பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் தமிழின் புதுமுகங்கள் 49 இலக்கியங்களும் ஆராயத்தக்கன. இந்நாள் வரை இவ் வகையில் ஓர் ஆராய்ச்சி நூலும் உருவாகாமை எண்ணி இரங்கத்தக்கது. பிறகலைகள் என்ற தலைப்பில் கட்டடக் கலையும், ஓவியம், சிற்பம், இசை, கூத்து முதலிய கலை களும் சிறப்பாகத் துருவத்தக்கன. இனி, இக்கட்டுரையை முடிக்குமுன் முழங்கத் தக்கன இரண்டு: (1) எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைமை போலவே அரசியல், பொருளியல், சமூகவியல், கலேயியல், அறவியல் ஆகியவை ஐந்தும் ஒன்றுடன் ஒன்று தொடர் புடையன. எனவே, ஒன்று பற்றிய ஆராய்ச்சி பிற ஆராய்ச்சிகளில் ஒ ன் று த லு ம் ஒன்று (உண்டு). (3) அரசியல், பொருளியல், சமூகவியல், கலையியல், அறிவியல் என்ற ஐவகைப் புதுப் பொருட் பாகுபாடுகள் மிகவும் அடிப்படையானவையே.