பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 புதுமுகங்களின் புதுப்பொலிவுகள் í பொருள் தமிழின்-தமிழ்ப் பொருளின்-புதுமுகங் களாக விளங்குபவை (1) அரசியல், (3) பொருளியல். (3) சமூகவியல், (4) கலேயியல், (5) அறவியல் ஆகிய ஐவகைப் புதுப் பாகுபாடுகளே என்பதைக் கண்டோம். ஐந்திலக்கணத் தமிழின் கடுவனதாக விளங்கும் அப் பொருள் தமிழ்ப் புதுமுகங்களின் புதுப் பொலிவுகள் சில: வற்றையேனும் சீராட்டிப் பாராட்டுவதே இக்கட்டுரை யின் நோக்கம். சிறப்பாக, இலக்கியக் கொள்கைகளும் தமிழிலக்கியமும்’ (இலக்கியக் கொள்கைளும், அவை: தமிழிலக்கியத்திற்குப் பொருந்துமாறும்) என்று தொடர்பு படுத்திப் படிக்கும் கல்விக்கு இஃது இன்றியமையாதது.