பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் குழந்தையின் தாயும் தந்தையும் శ} தக்கன. நுண்ணறிவால் நூலறிவும், நூலறிவால் நுண்ணறிவும் வளம் பெறல் கண்கூடு. இவை யிரண்டும் கணவனும் மனைவியும் போல. இவற்றின் கலப்பர்ல் பிறக்கும் குழந்தைகளுள் ஒன்றே இலக்கியம் என்றும் ஒதலாம். இந்த இலக்கியக் குழந்தை பிறப்பதற்கு அடிப்படை யாக உள்ள இருபெரு விழைவுகள் யாவை? ஒன்று அறிவார்வம் , மற்ருென்று அறிவிப்பார்வம். அறிதலும் es.ogg|IB (Interest in getting-i-giving hidden ideas). - அதிலும் மறையானவற்றை அறிதலும் அறிவித்தலும்மனிதன் அடிப்படை விழைவுகள் என்று அறுதியிட்டு உறுதி கூறலாம். ஒவ்வொரு உயிரிடமும் ஒன்றியுள்ள இந்த உணர்வு உயரும் உயர்ச்சியைப் பொறுத்தே. மன்பதையின் அனைத்து நலன்களும் வளன்களும் எனலாம். அறிவார்வ முளை வளர்ந்து பரப்பும் கிளேக்ள் மூன்று எனலாம். ஒன்று, பிறர் உள்ளத்து உணர்வுகளை அறிந்து உணரும் ஆர்வம்-துய்த்தல்;இரண்டு, உலகத் துஉயிர் உள்உயிர் இயல்பொருள்களின் இயல்புகளே ஆய்ந்து அறியும் ஆர்வம் - துருவல்: மூன்று, பிற உள்ளத்து உணர்வு களே ஆய்வதினும் தன் உள்ளத்து உணர்வுகளைத் தானே தனித்து ஊடுருவித் தெளிதல்-இம்முக்கூற்றின் முக்கூடலே தில்லைக் கூத்தர் திருவுருவம் எ ன்பது h போற்றும் கலைமலைக் கடல் ஆனந்த குமாரசாமியின் பெரும் கருத்து. இதை விள