பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய இயல் தெளிதல்-end .# துய்த்தல் துருவல் பெரிதும் இம் மூவகை அறிவார்வத்தாலும் முகிழ்விக் கும் பயன்களைக் கலை, அறிவியல், மெய்ப்பொருளியல் என்று முறைப் படுத்தலாம். இம் மூன்றையும் எங் கிலே யிலும் துல்லியக் கோடிட்டுத் தனிமைப் படுத்தத் துணியல் ஆகாது. எனினும் இவற்றிற்கிடையில் உள்ள தனித் தன்மைகளையும் மறத்தற்கு இல்லை. 3 உணர்வியல், அறிவியல், உண்மையியல்-இ ம் மூன்றுள்ளும் இலக்கியக் கலைக்கு உயிராய் ஒளிர்வது முன்னதே; பின்னவை உளமாய், உடலாய்ப் பயன்படல் கூடும். இந்த உணர்வியல், அறிவியலினும் உயர்ந்தது என்று கண்டுள்ளோம். அதற்கு வள்ளுவர் குறள் வழி காட்டவும் செய்தது. - அறிவின்ை ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்ருக் கடை (315)