பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவின் அளவுகள்-ஆய்வும் தோய்வும் 75 செத்து மருந்து தரமுடியாது என்னும் அரிய பெரிய அறி வுரை அடிக்கடி கல்வினெறிக் காவலர் திரு. கெ. து. சுந்தர வடிவேல் அவர்கள் வாயில் வருவதாகும். இவ்வறிவுரை கலையுரைப்போர்க்கு இன்றியமையாததே. காரணம் கலைஞர் பெரிதும் உணர்விலே பிறந்து, உணர்விலே வளர்ந்து, உணர்விலே சிறந்து,உணர்விலே இறந்து (எல்லே கடந்து என்ற பொருளிலும்) போகின்றவர்கள். எனவே, உணர்வு வெள்ளத்தில் இழுபட்டுப் போகும் அவர்கட்கு இந்த அறிவுரை மிகமிக இன்றியமையாததே. காத்தழும் பேறப் பாடா'தாயினும் முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி. ஆம். பாரி-கபிலர் இல்லை! இதுதான் உணர்வு கில, முல்லைக்குக் கொம்பு ஒன்று கட்டால் போதும். தேரையா கொடுப்பது ஆம். அது மடம்-கொடை மடம் ஒரோ வழி செய்தான் இதைப் பாரி. ஆனால், கலைஞர்களோ இதை ஒவ்வொரு போதும் செய்வார்கள். இது அவர்கட்கு இயல்பு. காரணம் அவர்கள் நெஞ்சம் கல்லன்றுகற்பூரம் தன்னையே அழித்துக் கொண்டு உலகுக்கு எல்லாம் நறுமணம் பரப்ப விழையும் தியாக வீரர்கள் கலைஞர்கள். ஆனால், அவர்கள் தொண்டு நிலத்த பயனைத் தரவேண்டுமானல் வெறுங் கலைஞர்களாக இல்லாமல் மெய்ப் பொருள் கலைஞர்களாகவும் அவர்கள் மேவ வேண்டும். அப்போதுதான் அளவின் அளவறிந்து வாழும் ஆற்றல் அவர்கட்கு வரும். அதன் பயனுக ஆய்விலே தோய்வும், தோய்விலே ஆய்வும் ஓங்கும். ஆய்விலே தோய்வும், தோய்விலே ஆய்வும் ஏற்பட ஏற்படக் கலை காட்டாற்று வெள்ளமாய் இராது; தேக்கி வைத்த அணைக்கட்டிலிருந்து அளந்து திறந்துவிடப்படும் வெள்ளத் திரளாய் விளங்கும். அறிவார்ந்த கலைஞனின் உள்ளம் காட்டார்களின் வெள்ளங்களைக் கட்டிக் காத்துப் பல்லாற்ருனும் பயன்பட நீர் வழங்கும் ஆண்