பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - இலக்கிய இயல் யாக இருத்தலே பண்பும் பயனும் என்பது எண்ணிப் பார்ப்பார்க்குத் திண்ணிதாகும். இதை ஒட்டிக் கருதத்தக்க இன்னொரு கருத்து, இலக்கியனின் (ஏன்?-பொதுவாகச் .ெ சா ன் ஞ ல் கலைஞனின்) கோக்கும் போக்கும் பற்றியதாகும். இலக் கியனின் நோக்கும் போக்கும் உவகை ஊட்டுவதாய் மட்டும் இராமல் உயர்வு ஊட்டுவதாயும் இருக்க வேண்டும், உவகை, உயர்வு இரண்டுள் முன்னது பின்ன தற்குத் துணேபுரிவதாய் அமைய வேண்டுமே அன்றி, முன்னதுள் பின்னது மூழ்கிவிடக் கூடாது. காரணம் உவகை, எவர்க்கும் ஒப்ப முடிந்த ஒன்று. இதற்கும் காரணம் உவகை-அரியது கிலேயானது- அன்று; உயர்னே கிலேயானது. இதல்ை உயர்வே உவகையாகும் உயர்ந்த உள்ளம் உருவாக வேண்டும் என்பது தெளி வாகும். அங்கிலேயில் உவகையே உயர்வு-உயர்வே உவகை என்ருகும். ஈண்டு டர்ல்ஸ்டாயின் அறிவுரை கினேந்து போற்றற்குரியது. அது கலையில் தீமையைத் திட்டத் திட்ட அதில் ஈடுபடுவோர் உள்ளத்தில் அத் இமையே படியும் என்பதாகும். எனவே, தீமையை விலக்கவே தீமையை விளக்குகிறேன் என்னும் கருத்து ஏற்புடையது அன்று. எடுத்துக் காட்டாகக் களவு முறைகளே (மெய் கிலேயிலும், கற்பனை கிலேயிலும்) காவல் துறை தெரிந்து கொள்வது இன்றியமையாதது; ஆனால், ஏனேயோரும் தெரிந்து கொள்ளக் கலேயைப் பயன்படுத்து வது களவை வளர்க்கவே செய்யும். எனவே, விடுதலை இந்தியாவின் விழுமிய தந்தையாக விளங்கும் காந்தி அடிகள் எப்போதும் வலியுறுத்தியது போலவே முடிவைப் போலவே முறையும் (Ends and Means) உயர்ந்ததாய் இருக்க வேண்டும். -