பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viíí திரு. கு. மோகனராசு, பி. எசி. எம். ஏ. அவர்கட்கும் இதில் அவர் தம்பி திரு. க. வேங்கடேசன் எம். ஏ. அவர்கட்கும் இது போது என் நல்வாழ்த்துகள். {3} எனக்கு அறிவுத் தந்தை பேராசிரியர் டாக்டர் மு. வ. அரசியல் தத்தை மாண்புமிகு சிலம்புச் செல்வர். அண்மைக் காலத்தில் எனக்கும் கடைக்கண் காட்டுவோர்களுள் ஒருவர் ஆங்கிலப் பெரும் பேராசிரியர்-நடமாடும் இலக்கியம் பண்பாட்டின் தண்னமுதம்- டாக்டர் கே. ஆர். சீனிவாச ஐயங்காள்; மற்ருெருவர் வடமொழிப் பேராசிரியர்-ஆட்சிக் கவே வல்லுநர் (ஆம், ஆரியத்திலும் காரியத்திலும்)--திரு. பெ. திருஞானசம்பந்தம், மும் மோழிப் பேராசிரியர்கள் மூவரும் பூ வென்னது தம் அணிந்துரைகளால் இப்புல்லி -தழ்ப் பூவைப் பொற்பூ ஆக்கியுள்ளார்கள் காக்கும். கடவுள் பெயர் கொண்ட பெருமக்கள் இருவர்க்கும் நாளும் இன்னிசையால் தமிழ்ப் பரப்பிய நாயனரின் திருப் பெயர் தாங்கிய அறிஞர்க்கும் என் தலை தாழ்த்திய வணக்கங்கள். (4) இதயம் ஈர்க்கும்; கலே கவரும்; உறவு ஒன்று படுத்தும். இந்நூலுள் உள்ள கட்டுரைகள் யாவும் இலக்கிய இதயம்’ படைத்த என் நண்பர் திரு. க. சோமசுந்தரம் நன்முயற்சி. வால் தனிச் சிறப்புகளுடன் நடைபெறும் தமிழ் உறவில் இடம் பெற்றவை. உண்மையை உரைத்தால் 'தமிழ் உறவு’ காரணமாகவே இந்நூல் உடலும் உயிரும் ஒரு சேரப் பெற்றுள்ளது. இல்லையேல் நாடாப் பதிவு வசதி இல்லாத பல்கலைக்கழக வகுப்பில் நிகழ்த்திய பேச்சுகள் செத்தே" போயிருக்கும். (சிந்தனை ஒவியமாகிக் கருத்தோவியங்களை வரையும் ஆசிரியர்களின் சொல்லோவியங்களை அப்போதேஅப்படியே-பதிவு செய்யும் வசதிகளைப் பல்கலைக் கழகங்கள் செய்து தரும் நாள் எந்நாளோ? இந்நாள் அதன் பெரும் பளுவெல்லாம் தேர்வுகள் நடத்துவதே அல்லவா?) என்னேயும் ஒரு பொருளாய் ஏற்றுக் கொண்டு கலைவளர்க்கும் \.