பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறை-மறை-குறை 73. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மணக்கவலை மாற்றல் அரிது. . மனிதன் தன் தலைவனைத் தானே உணரத்தடையாக இருப்பன, தானே சிக்கிக் கொண்ட வலைகள்'. இந்த இடத்தில் வலைகளைப் படைத்தது யார்? என்ற விகு எழுதல் இயற்கை விடை இயற்கை என்பதுதான். சைவசிந்தாந்தப்படி தலைவன், உயிர், தளை (பதி, பசு, பாசம்) மூன்றும் தான்தோன்றிகளே. அப்படியால்ை மனிதன் செய்யும் தவறுகட்கு இயற்கையே காரணம் அல்லவா? ஆழ்ந்து கருதில்ை அறவே இல்லை எனலாம். வலைகள் இருப்பதாலேயே வலைகளில் விழவேண்டும் என்ற விதி இல்லை. வலைகள் இருந்தும் வலைகளில் விழாமல் இருப்பதே மதி. ஆனால், மதிகெட்ட மாந்தர் விதியின் மேல் பழியை வீசி எறிவதைப் பார்க்கிருேம். இது தவறு. வாழ்க்கை ஒரு தடைப் பந்தயம் (Hardies Race): தடைகளில்-தடைகளால்-தடுக்கிவிழாமல் தாண்டிச் செல்லும் திறமையை அளக்கவே வாழ்க்கைப் பந்தயம் வைக்கப்பட்டுள்ளது. அதை உணராமல் ஏன் தடைகள்? என்று கேட்பது வாழைப்பழச் சோம்பேறியின் வாய்ப் புலம்பல். . 2 இனி இலக்கிய இயல் ஆராய்ச்சியில் காணத் தககது-கருதத்தக்கது. மனித வாழ்க்கையை மடக்கும் தடைகள் - வலைகளின்-அடிப்படைத் தன்மைகள் எவை என்பதாகும். இதை அறிவது இன்றிமையாதது. மனிதனுக்கு இருக்கும் மயக்கங்களே இருவகையாகப் பகுக் கலாம். ஒன்று உயர்ந்தது; மற்ருென்று இழிந்தது.