பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறை-மறை-குறை 8% பாலுணர்வு (Se-feeling) மிகமிகப் பழைய உணர்வு. அது மிகையாகும்போது பாழுணர்வு ஆகும். இது :ஒவ்வொருவருக்கும் பட்டறிவில் படக்கூடியதே-படுவதே. ஆயினும் மனிதன் இதற்குப் பலியாவதற்கு முதல் காரணம், கண்கூடாகக் கிடைக்கும் ஈடு இணையற்ற உடலின்பம் காடியே. - அறிவு வழி கிடைக்கக்கூடிய இன்பங்கள் அப் போதைக்கே கிடைக்காதவை; எப்போதாவது கிடைத்தே திரும் என்றும் கண்கூடாக மெய்ப்பிக்க முடியாது. இதல்ை தான் கைமேல் காக; வாய்மேல் தோசை' என்று, ஒரு பகல் வாழ்வுக்கு உழலும் ஈசல் போல் பலரும் பலி யாகின்றனர். இனி மனிதன் குறையிலும் சிறை'யுள்ளதைச் சற்றே கினைப்போம். மிகச் சாதாரண மனிதனும் தான் உடலின்பம் துய்க்கும்போது அவ்வின்பத்தைத் தனக்குத் தருவோர்க்கும் தான் இன்பம் தருவதாகவே எண்ணி மகிழ்கிருன், இங்கிலையில் மனம் வளர்ந்த மனிதன் அவ் வளர்ச்சிக்கு ஏற்பத் தன்னலத்திலும் பிறர் நலம் கருதல் இயற்கை. இங்குதான் இதுவும் ஒரு மாயை' என்று உணரப்படவேண்டும் இன்றியமையாமை உள்ளது. அன்பும் மாயைதான். இவ்வுண்மையை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசுவதாகக் கம்பன் கழறு வதால் உய்த்துணர்ந்து கற்கலாம். சரியாகச் சொன்னுல் அன்பு ஒரு முறையாகலாமே தவிர, அதுவே முடிவாகாது. இந்த இடத்தில் அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்’ என்ற திருமூலர் திருவாக்கு நினைவுக்கு வருதல் இயற்கை. இதற்கு அமைதி